Read Preliminary Report Here
தமிழுக்கு, கீழே பார்க்கவும்.
11 April, 2022, Chennai — Respiratory illnesses are very high among “under 5” children living around the Ennore thermal power plant cluster, according to a health study conducted by Healthy Energy Initiative and postgraduate public health students from School of Public Health, SRM Institute of Science and Technology. More than 63% of the 207 under 5 children from the Ennore area reported having experienced one or more respiratory symptoms in the month preceding the survey. The study finding of respiratory infection (RI) among children is very high compared to Government of India’s 2019-2021 National Family Health Survey data for Chennai and Thiruvallur. NFHS records prevalence of acute RI symptoms of 1.0 percent among under 5 children from Chennai and 3.9 for Thiruvallur. The current study records a prevalence of 63% among children in Ennore area.
Respiratory illness rates were highest in Arunodhaya Nagar and Kattukuppam; all 13 children (100%) surveyed in Arunodhaya Nagar reported one or more symptoms of respiratory infection in the 30 days preceding the survey, while 92% (32 children out of 37 surveyed) of the children from Kattukuppam had been sick with one or more respiratory symptom in the preceding month. Sivanpadaiveethi Kuppam and AIR Nagar too recorded high prevalence – 61% and 49% — of respiratory distress among children. Running nose was the most commonly reported symptom with 48% of the children reporting it; 40% reported having suffered nasal congestion, 35% reported dry cough and 5% reported wheezing.
The study confirms reports by committees set up by the National Green Tribunal in various cases. In November 2021, a CPCB-TNPCB joint committee found that the carrying capacity of the Ennore area for particulate (dust) pollution was exceeded due to emissions from just one source – namely, TANGEDCO’s North Chennai Thermal Power Station. In other words, even assuming there were no other industries in the region, and no movement of vehicles, the emissions from just the thermal power plant contributed pollution in excess of the ability of the local environment to assimilate it.
Last week, another high-level Joint Expert Committee (JEC) set up by the National Green Tribunal reported that the high levels of pollution, particularly of cadmium, chromium, lead and copper, in the Ennore area had considerably increased the risk of cancer and non-cancer diseases among children in the Ennore area. The JEC’s report found that risk of non-cancer disease (also known as hazard index) was very high for Ennore area children exposed to lead and cadmium and ranged between 3.36 and 5.01 respectively; Hazard Index should be less than 1 for a healthy population. Cancer risk for Ennore area children exposed to lead, chromium and cadmium was also high and ranged between 1.06 in 10,000 for lead, 1.26 in a 1000 for chromium and nearly 4 in a 1000 for cadmium. That is more than a 1000 times higher risk than levels of concern for exposure to cadmium and chromium. According to internationally accepted norms, cancer risk greater than 1 in a million is considered to be at or above levels of concern.
“We have been poisoned for the last 30 years. The Pollution Control Board is useless and does not regulate any of the industries. Now, with ETPS, they want to set up another coal plant and want to know our views. What do they expect us to say? That they can go ahead and finish off our children?,” said Adhilakshmi, a mother from Kattukuppam, one of the worst affected villages.
“Coal plants are dirty. It is foolhardy for Chennai to poison itself for the sake of electricity. How can any development policy that ignores the rights of children and the environment ever be successful?” said Nina Subramani, a Chennai-based volunteer with the national network Warrior Moms.
“It is frightening to see such a high incidence of respiratory symptoms in children under 5. Exposure to high levels of pollution increases the risk of pneumonia in children, and even leads to death in many cases! We must take ALL steps to reduce air pollution and ensure a healthy and bright future for our children,” said Dr. Arvind Kumar, one of the best known pulmonologist in the country, and Delhi-based founder trustee of Doctors for Clean Air and Climate Action and Lung Care Foundation.
For more information, contact: Nityanand Jayaraman: 9444082401; Save Ennore Creek Campaign.
Dr. Vishvaja Sambath: 9629505983; Healthy Energy Initiative – India
Blog: storyofennore.wordpress.com
மூச்சு திணறும் எண்ணூர் குழந்தைகள்: புது ஆய்வு கண்டுபிடிப்பு
11 ஏப்ரல் 2022, சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய பகுதியை சுற்றி வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளது என சுத்தமான ஆற்றலுக்கான முன்னெடுப்பு (Healthy Energy Initiative, India) மற்றும் எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி (SRM School of Public Health), எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை பொது சுகாதார மாணவர்களால் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. எண்ணூர் பகுதியில் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட 207 குழந்தைகளில் 63%க்கும் அதிகமானோர் ஆய்வுக்கு முந்தைய மாதத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவாச அறிகுறிகளை அனுபவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் 2019-2021 ஆம் ஆண்டுக்கான சென்னை மற்றும் திருவள்ளூருக்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புத் (NFHS) தரவுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளிடையே சுவாச நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது மிக அதிகம். சென்னையைச் சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.0 சதவீதமும், திருவள்ளூரில் 3.9 சதவீதமும் சுவாச கோளாறு அறிகுறிகள் இருப்பதாக NFHS பதிவு செய்துள்ளது. எண்ணூர் பகுதியில் உள்ள குழந்தைகளிடையே 63% பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு பதிவு செய்து இருகிறது.
சுவாச நோய் விகிதம் அருணோதயா நகர் மற்றும் காட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் அதிகமாக இருந்தது; அருணோதயா நகரில் கணக்கெடுக்கப்பட்ட அனைத்து 13 குழந்தைகளும் (100%) கணக்கெடுப்புக்கு முந்தைய 30 நாட்களில் சுவாச கோளாறு அறிகுறிகளின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர், அதே நேரத்தில் காட்டுக்குப்பம் குழந்தைகளில் 92% (கணக்கெடுக்கப்பட்ட 37 குழந்தைகளில் 32 குழந்தைகள்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவாச கோளாறு அறிகுறிகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர். சிவன்படைவீதி குப்பம் (61%) மற்றும் ஏ.ஐ.ஆர்.நகர் (49%) ஆகிய இடங்களிலும் குழந்தைகளிடையே சுவாசக் கோளாறு அதிகமாக ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல் என்பது பொதுவாகக் கூறப்பட்ட அறிகுறியாகும், 48% குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும்; 40% பேர் மூக்கடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், 35% பேர் வறட்டு இருமல் மற்றும் 5% பேர் மூச்சுத்திணறல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
பல்வேறு வழக்குகளில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுக்களின் அறிக்கைகளை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. நவம்பர் 2021 இல், CPCB-TNPCB கூட்டுக் குழு, எண்ணூர் பகுதியின் நுண் துகள் (தூசி) மாசுபாட்டிற்கான கொள்ளும் திறன் ஒரே ஒரு மூலத்திலிருந்து – அதாவது TANGEDCO-வின் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் மீறப்பட்டு இருப்பதாகக் கண்டறிந்தது. எளிய வார்த்தைகளில் கூறுவதானால், இப்பகுதியில் வேறு தொழிற்சாலைகள் இல்லை என்றும் வாகனங்களின் இயக்கம் இல்லை என்றும் வைத்துக் கொண்டாலும், அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் இப்பகுதியின் சுற்றுச்சூழலின் கொள்ளும் திறனைக் காட்டிலும் மீறும் வகையில் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட மற்றொரு உயர்மட்ட கூட்டு நிபுணர் குழு (JEC) எண்ணூர் பகுதியில் அதிக அளவு மாசுபாடு, குறிப்பாக காட்மியம், குரோமியம், ஈயம் மற்றும் தாமிரம் ஆகியவையால் எண்ணூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு புற்றுநோயின் அபாயத்தையும் புற்றுநோய் அல்லாத நோய்களின் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. JEC இன் அறிக்கை, ஈயம் மற்றும் காட்மியம் ஆகிவற்றிற்கு பாதுகாப்பற்ற முறையில் வெளிபடுவதால் எண்ணூர் பகுதி குழந்தைகளுக்கு புற்றுநோய் அல்லாத நோய்க்கான அபாயம் (ஆபத்து குறியீடு என்றும் அழைக்கப்படுகிறது) மிகவும் அதிகமாக உள்ளது. ஈயத்தினால் 3.36 மற்றும் காட்மியத்தினால் 5.01 ஆபத்து குறியீடு எண்ணூர் பகுதி குழந்தைகளுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது; ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு ஆபத்து குறியீடு 1க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஈயம், குரோமியம் மற்றும் காட்மியம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் எண்ணூர் பகுதி குழந்தைகளுக்கு புற்றுநோய் அபாயம் அதிகமாக இருக்கிறது மற்றும் ஈயத்திற்கு 10,000ல் 1.06, குரோமியத்திற்கு 1000ல் 1.26 மற்றும் காட்மியம் 1000ல் 4 என்ற அளவில் உள்ளது. இது காட்மியம் மற்றும் குரோமியத்தின் பாதுகாப்பற்ற வெளிப்பாட்டின் காரணமாக புற்று நோய் அபாயத்தை கவலையளிக்கும் அளவை (levels of concern for exposure) விட 1000 மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி, 10இலட்சத்தில் 1க்கும் அதிகமான புற்றுநோய் அபாயம் கவலைக்குரிய அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
“கடந்த 30 ஆண்டுகளாக விஷமூட்டப்பட்டுள்ளோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பயனற்றது மற்றும் எந்த ஒரு தொழிற்சாலையையும் ஒழுங்குபடுத்துவதில்லை. இப்பொது, ETPSன் பெயரில், அவர்கள் மற்றொரு நிலக்கரி மின் நிலையத்தை அமைக்க எங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறார்கள். நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் செய்வதை செய்ய சொல்லிவிட்டு எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை முடித்துவிட சொல்ல வேண்டுமா?”, என்று மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி அவர்கள் கூறினார்.
“நிலக்கரி ஆலைகள் விஷமானவை. மின்சாரத்துக்காக சென்னை தன்னை விஷமாக்கிக் கொள்வது முட்டாள்தனம். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் புறக்கணிக்கும் எந்தவொரு வளர்ச்சிக் கொள்கையும் எப்படி வெற்றிபெற முடியும்?”, தேசிய அளவிலான கூட்டமைப்பு வாரியர் மாம்ஸின் (Warrior Moms) சென்னையைச் சேர்ந்த தன்னார்வலரான நீனா சுப்ரமணி கூறினார்.
“எண்ணூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுவாச நோய் அறிகுறிகள் அதிகமாக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அதிக அளவு மாசுபாட்டிற்கு பாதுகாப்பற்று வெளிப்படுவதால் குழந்தைகளில் நிமோனியாவின் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கிறது! காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.” நாட்டிலுள்ள சிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்களுக்கான சுத்தமான காற்று மற்றும் நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையின் நிறுவனருமான Dr. அரவிந்த் குமார் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள,
நித்யானந்த் ஜெயராமன்: 9444082401, எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரம்
Dr Vishvaja Sambath: 9629505983, சுத்தமான ஆற்றலுக்கான முன்னெடுப்பு.
Like this:
Like Loading...