எண்ணூரில் ஆற்றைக் காணோம்! அதிரவைத்த ஆர்டிஐ தகவல்!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதிகளில் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற, இதுநாள் வரை வெளியிடப்படாத கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் (CRZ) வரைப்படத்தின் படி எண்ணூர் ஆற்றின் 8,000 ஏக்கர் நிலங்களில், மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் எந்த ஒரு  மேம்பாட்டுக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களில் 1090 ஏக்கரை ஆக்கிரமித்திருக்கின்றன.
ennorepost1
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையின் படி அதன் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும், மாநில மற்றும் மாவட்ட கடற்கரை மேம்பாட்டு குழுமங்களின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் வரைபடத்தின் அடிப்படையில் தான் மதிப்பிட வேண்டும். ஆனால், ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தங்களிடம் எண்ணூர் ஆற்றின் அங்கிகரீக்கப்பட்ட வரைபடம் இல்லை என திருவள்ளுவர் மாவட்ட  மற்றும் மாநில கடற்கரை மேம்பாட்டு குழுமங்கள் கூறியிருக்கின்றன. இதுவரையில் திட்ட அனுமதிக்கு  திட்டத்தை முன்மொழியும் நபர்கள் தந்த வரைபடங்களை அடிப்படையாக  வைத்து மட்டுமே அனுமதி தரப்பட்டு வந்திருக்கிறது. ஆர்டிஐ மூலம் தரப்பட்ட வரைபடத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜேசு ரத்தினம், எண்ணூர் அனைத்து கிராம மீனவ கூட்டமைப்பின் உறுப்பினர் ஸ்ரீனிவாசன், கடற்கரை வள மையத்தைச் சேர்ந்த சரவணன், சுற்றுசூழல் ஆர்வலர் நித்தியானந்த ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள், “கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்டிஐ மூலம் வழங்கப்பட்ட வரைபடத்தில்  1996-ஆம் ஆண்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைப்படம் என்றும், எண்ணூர் ஆற்றின்  6,469 ஏக்கர் நிலம் CRZ 1-ன் கீழ் மேம்பாட்டிற்கு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் காண்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆண்டு ஆர்டிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வரைபடத்தில் எண்ணூரில் ஆறே இல்லாததுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இரு தகவல்களுக்கும் ஆர்டிஐ கீழ் பெறப்பட்டதால் இதில்  ஒரு தகவல் பொய்யானது. ஆர்டிஐ-யின் படி தவறான தகவல் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும்,  2009-ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவல் வரைப்படத்தில் 16 கிமீ உள்ளடக்கியுள்ளது. இது கடற்கரை மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போகிறது. தற்போது பெறப்பட்ட வரைபடமோ 13 கிமீ நிலத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் வரைபட தகவலின் படி எண்ணூர் ஆற்றை மறைக்க முற்படும் தகவலே பொய்யானது.ennorepost2
ஆர்டிஐ தகவலின் படி கடந்த  1997-ல் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் தகவல் அடங்கியுள்ளது. அதில் எண்ணூரில் ஒரு பெட்ரோகெமிக்கல் பூங்காவை அமைப்பதற்கு தமிழக அரசு கோரிய சில மாற்றங்களுக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில் குறிப்பாக இந்திய அரசின் தலைமை நீர்நிலை வரைபடமாளரால் அங்கீகரிக்கப்பட்ட வரைப்படத்தின்படி, எண்ணூர் உப்பங்கழியின் எல்லைகளை மாற்றி அமைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உப்பங்கழியின் அறிவிப்பாணையின் மேற்பார்வையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. அதை மாற்றியமைப்பது குறித்தோ, அனுமதி அளிக்கப்பட்டது குறித்தோ அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
1996-ஆம் ஆண்டின் வரைபடத்தையே நாங்கள் நம்புகிறோம்; ஏன் என்றால் அதுவே சட்டத்திற்கும், யதார்த்தத்திற்கும் ஒத்துப்போகிறது. இந்த இருவேறு வரைபடங்கள் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டு புகார்கள் அளித்திருக்கிறோம்” என்றனர்.
பொதுவளங்களை ஆக்கிரமிப்பதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களே போட்டிபோட்டு செயல்படுவது இந்த செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது. அதேசமயம், பொதுவளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை மாநில அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டிருப்பதும் இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.
– சி.ஜீவா பாரதி
The article was originally published on Nakkheeran.in. It can be accessed here.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s