REPORT RELEASE : Air Pollution Chokes Chennai – Doctors For Clean Air Urge City’s Inclusion in National Clean Air Programme

FULL REPORT HERE

READ ENGLISH PRESS RELEASE HERE

READ TAMIL PRESS RELEASE HERE

Air quality in all 15 locations sampled from across the city between May and July 2019 was unhealthy, with levels of PM 2.5 in the worst affected areas nearly three times the national standard of 60 ug/m3, according to a study released by Healthy Energy Initiative and Doctors for Clean Air-Tamil Nadu. The widespread nature of pollution and the fact that the samples were taken in summer highlights how the current pollution crisis is neither an isolated nor a seasonal incident. The study analysed 24-hour air samples for PM 2.5 and a host of heavy metals.

The densely populated areas of North Chennai were worst affected by dust and heavy metal pollution owing to the high concentration of polluting industries, oil refinery and thermal power plants in Manali and Ennore. Four out of the five highest PM2.5 levels were recorded in North Chennai with Kuruvimedu, near NTPC Vallur’s coal ash pond, registering the highest levels at 187 μg/ m3.

T.Nagar, Chennai’s only Smart City neighbourhood, also made it to the top 5 polluted neighbourhoods in Chennai with with 167 μg/m3.

Apart from PM 2.5, elevated levels of heavy metals such as manganese, nickel, lead and crystalline silica were found. Manganese and lead are neurotoxins, while crystalline silica is a respiratory irritant, and can cause silicosis, a fatal disease generally known to only affect people exposed at workplaces.

“Health studies have shown a significant association between exposure to fine particles and premature mortality. Other significant effects include aggravation of respiratory and cardiovascular disease, lung disease, decreased lung function, asthma attacks and heart attacks” said Dr. Hissamudin Papa, founder and director of HUMA Hospitals in Chennai.

Ministry of Environment, Forestry and Climate Change in 2018 launched ‘National Clean Air Programme (NCAP)’ to curb air pollution in various Indian cities. Across India, 122 cities have been identified as “Non-Attainment Cities.” Under the NCAP, these cities aim to reduce pollution levels by 20% – 30%. Despite Chennai’s perennial pollution problem, the city has not been included in the NCAP which will force it to reduce pollution to acceptable levels.

Chennai is unlike any other city in India, as it is the only city with three mega sea ports within the metropolitan area and the associated movement of heavy diesel vehicles, 3300 MW of coal thermal plants, a 10 million tonne per annum oil refinery, high vehicular traffic, and two massive smouldering garbage dumps.

“The high density of air pollution sources and the perennial issues with air quality in Chennai ought to have secured it a place as a non-attainment city. Chennai should be included in the NCAP so that a concrete plan is executed to clear up Chennai’s air,” said Dr. G. Chandrasekar, a general surgeon representing Doctors For Clean Air – Tamilnadu.

For more details, contact: Vishvaja Sambath: +91 9629505983; Prasanth J: 9176463032

PRESS RELEASE : Massive protest by Pulicat Fishers Against Mega Port and Industrial Estate by Adani

தமிழ் செய்தி வெளியீடு இங்கே

WhatsApp Image 2019-10-30 at 11.13.51 AM.jpeg

Pulicat, 30th October 2019:  Condemning the proposed takeover by Adani of productive fishing grounds at sea and in the river for setting up a port and industrial area, thousands of fisherfolk from Lighthouse, Thangalperumbalam and Pulicat Panchayats organized a strike near Pulicat bus stand, today.

Fisherfolk allege that Adani Ports and SEZ Limited has concealed information about fisher livelihood and important fishing areas to secure ‘Terms of Reference’ (TOR) from the Expert Appraisal Committee of the union environment ministry for its new Rs. 53,031 crore project.

Adani’s proposal, touted as a port expansion project in Kattupalli island in Thiruvallur district, is actually a Greenfield port-cum-industrial estate project.

Under the Coastal Regulation Zone Notification (CRZ) 2011, a Coastal Zone Management Plan (CZMP) that indicates fishing grounds and fish breeding areas must be prepared. A detailed local level CZMP, that contains information about fishing villages, their community infrastructure, livelihood spaces and a long term housing plan for the fishing community is also mandated under the CRZ 2011. However, these have not been completed till date. “The usage of such an incomplete plan to grant Adani TOR to analyze environmental impact of setting up a port and industrial area is highly problematic, and will affect thousands of fisherfolk in the Thiruvallur District. This act exposes the incompetency of the state and central governments. In the absence of a complete CZMP, we will not allow any such project to come up in our area” said a fisher representative from the Thangalperumbalam Panchayat in the Pulicat Area.

If this project materializes, large scale coastal erosion will erode the coastline between Koraikuppam and Goongankuppam, robbing thousands of their homes and livelihoods. In addition, the Pulicat Lake, one of India’s largest wetlands and important bird sanctuary will be at risk of merging with the Bay of Bengal as erosion eats away the narrow strip separating the ocean from the lake. Fisher leaders warned that the project is a threat to the security of North Chennai and Manali areas. As a third of the project area is proposed to be developed by converting wetlands and Kosasthalaiyar backwaters to real estate, rain waters during heavy rain incidents, and seawater during storm surges will inundate Chennai and Ponneri.

WhatsApp Image 2019-10-30 at 11.46.25 AM.jpeg

Demands of the fishers from Lighthouse, Thangalperumbalam and Pulicat Fisherfolk:

  1. Reject the proposal to set up the Adani Port and Industrial Area over productive fishing zones and wetlands.
  2. Keeping in mind climate change, sea level rise and the future of the next generations, actions to refrain from any further privatizing of the wetlands and water bodies from Ennore-Pulicat and take proactive steps for protection.
  3. Prepare a comprehensive local level Coastal Zone Management Plan and long term housing plan for fishing communities with proper consultation and permit no such projects that will encroach into the sea, coastline, river, wetlands and flood plains.

For More Information, Contact: Fisher Representatives from Lighthouse, Thangalperumbalam and Pulicat Panchayat – 6381069296, 9655944785, 9894967079

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை அருகே அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  வருவதாகவுவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காட்டுப்பள்ளி துறைமுகம், . இந்தியாவில் இருக்கும் மிகவும் நவீன துறைமுகங்களில் காட்டுப்பள்ளியும் ஒன்று. இந்த துறைமுகத் திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற இடங்களுக்குச் செல்வதும், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிங்களுக்குச் செல்வதும் சுலபமாக இருக்கும் எனக் கூறப்படுகிளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு , ‘லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங் களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை வாங்கி அதானி குழுமம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதைத்தொடர்ந்து துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு ‘தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம்‘ பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளன.

இந்த நிலையில் அதானி நிறுவனத்தில் நடவடிக்கை காரணமாக, துறைமுகத்தை சுற்றியுள்ளப் பகுதிகளி, கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர்

இந்த துறைமுகம் தொடர்பாக நிபுணர் மதிப்பீட்டுக் குழு (The Expert Appraisal Committee (EAC)) பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது அந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகப்பணிகள் காரணமாக, காட்டுப்பளி பகுதி மற்றும் எண்ணூர் தெற்கு கடற்கரை பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்பட்டு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே என்னூர் துறைமுகத்தை நிர்மாணித்தபின் என்னூரின் தெற்கு கடற்கரைப் பகுதி அரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு பவந்த நிலையில், தற்போது, அது மேலும்  2.8 கி.மீ தூரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து  சேவ் எண்ணூர்  பிரசார இயக்கம் (Save Ennore Creek Campaign) ஒருங்கிணைப்பாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபந்தராமன்  உள்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது, சுற்றுச்சூழல் விதிகளை மீறி காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்பட்ட வருவதால், அதறகு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

துறைமுகம் அமைப்பதற்காக, கடலில், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொட்டி, வருகிறது அதானி நிறுவனம். இதன்  மூலம் கடலில் 2,000 ஏக்கர் நிலத்தை மீட்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், “இது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதி. இந்த வகை நடவடிக்கைகளை அங்கு  மேற்கொள்ள முடியாது, ”என்று கூறினார். இந்த திட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில் அது வரும் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பேரழிவுகள் நிச்சயம் நிகழும் என்றும்  அவர் எச்சரித்தார்.

இதுகுறித்து பேசிய பூவுலகின் நன்பர்கலின் ஜி.சுந்தர்ராஜன், காட்டுப்பள்ளி துறைமுகப் பணி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பெல்ட் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்க வேண்டியதிருக்கும், தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறினார்.

காட்டுப்பள்ளி பகுதியை ஆய்வு மேற்கொண்ட கட்டிடக்கலை ஆசிரியரான சுதிர்,  நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் நிபந்தனைகளை  புறக்கணித்து, அதானி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.  கடந்த 2009ம் ஆண்டு  சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மெமோராண்டம் படி, காட்டுப்பள்ளி துறைமுகம் அமைய உள்ள பகுதி, உயர் அரிப்பு மண்டலங்களில் அல்லது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதி. இந்த இடங்களில் துறைமுகங்கள் அமைப்பது தடைசெய்யப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் துறைமுகம் அமைக்க தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என்று கூறினார்.

காட்டுப்பள்ளி துறைமுகம் அமைவதற்கு, அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய துறைமுகத்தால் மீனவர்கள், பொதுமக்கள் செய்து வரும் தொழில்கள் முடங்கியுள்ளன. அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழியும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே, . அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்து வருவதாக சூற்றுச்சூழல் நிபுணர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்து  உள்ளார்.

This article appeared on patrikai.com on 01st August 2019. Read it here .

 

Adani Ports at kattupalli chennai – chennai fisher men fear loss of livelihood

The Union Ministry of Environment, Forests and Climate Change (MoEF&CC) is likely to give approval for the massive expansion of Kattupalli Port, proposed by Adani Group, about 30 km from Chennai. An Expert Appraisal Committee (Infra-2) for projects related to All Ship Breaking Yard including Ports and Harbours, whose meeting was conducted in New Delhi on Friday, has reportedly granted Terms of Reference (ToR) for conducting environment impact assessment studies to obtain clearance. In the mean by the people of Parvez card Pulicat and coastal zones of Northern Chennai Express the strong objection to the port there like that if the port come to operation they said their livelihood will be a big Question mark.

The video was posted by Red Pix 24×7 on Youtube on 31st July 2019

‘பிரச்னை இருப்பது உண்மைதான், ஆனால்..!’ அதானி துறைமுகத்துக்கு அரசின் ‘அடடே’ ஆதரவு

வங்கக் கடலையும் பழவேற்காட்டையும் பிரித்து நிறுத்தும் மிகச் சிறிய மணல் பரப்பைத் துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள் அரித்து எடுத்துவிடும். பழவேற்காடு ஏரி வங்கக் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிடும்.

பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது காட்டுப்பள்ளி கிராமம். அங்குதான் அதானிக்குச் சொந்தமான துறைமுகமும் இருக்கிறது. 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தத் துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருப்பதையும் அந்தத் திட்டம் கொண்டுவரப்போகும் சூழலியல் பேரழிவு குறித்தும் விகடன் இணையத்திலும் ஜூனியர் விகடனிலும் ஏற்கெனவே கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

பழவேற்காடு

இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்குச் சூழலியல் அனுமதி பெற முதல்கட்டமாகச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்குக் குறிப்பாணை கேட்டு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சூழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய குறிப்பாணை வழங்கலாமா கூடாதா என்று ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய வல்லுநர் துணைக்குழு அந்தப் பகுதியை ஆய்வு செய்து அறிக்கையும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேற்கூறிய ஆய்வாளர்களும் பொதுமக்களும் என்னென்ன பிரச்னைகளால் அந்தத் திட்டத்தை எதிர்த்தார்களோ அத்தனையும் இருக்கிறது என்றே கூறியுள்ளனர்.

அதானி துறைமுகம் ஆக்கிரமிக்கப்போகும் ஏரிகள், குளங்கள், கொற்றலை ஆறு, உப்பளங்கள் என்று எதையுமே அவர்கள் மறுக்கவில்லை. ஆனால், இறுதியில் இந்தத் திட்டத்துக்குக் குறிப்பாணை வழங்கலாமா கூடாதா என்ற கேள்விக்குக் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்கள்.

காட்டுப்பள்ளி துறைமுகம்

காட்டுப்பள்ளியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பெருந்துறைமுகம் உள்ளூர் மக்களுக்கும் சென்னை மாநகரத்துக்கும் வாழ்வா, சாவா என்ற பிரச்னையாக இருக்கும். இந்தப் பேராபத்தை எதிர்த்துப் பழவேற்காடு-எண்ணூர் மீனவர்களும் விவசாயிகளும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லையெனில், இதை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவோம் என்று தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் வாழும் 50,000 மீனவர்களின் வாழ்வாதாரத்தை அதானியின் இந்தத் திட்டம் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல், சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை மேலும் தீவிரமாக்குவதுடன், சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 10 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தையும் புயல் தாக்குதலின் தீவிரத்தையும் அதிகப்படுத்தும் என்று அந்த மக்கள் அஞ்சுகின்றனர். ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தின் காரணமாகத் தண்ணீர் நெருக்கடியும் கடல் மட்ட உயர்வும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தத் திட்டம் அதன் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தும்.

திட்டத்தில் குறிப்பிடும் வளர்ச்சிக்கான பகுதிகள் கடலரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வருகின்றன. கொற்றலை ஆறு முகத்துவாரத்தையொட்டியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளை மூடுவதற்கு அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் கட்டமைப்பும் பக்கிங்ஹாம் கால்வாயும் எண்ணூர் கழிவெளிப் பகுதியும் சூழலியல்ரீதியாக நுண் தன்மையுடைய (Ecologically sensitive areas) பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை. அத்துடன் கடலோர பாதுகாப்பு மண்டலம் ஒன்றின் (CRZ-1) கீழ் அவை வருகின்றன – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் துணைக்குழு அறிக்கை

மேலே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தன்மையுள்ள நிலப்பகுதிகளில் வளர்ச்சிக் கட்டுமானங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளன. அந்த நிலப்பகுதியின் இத்தகைய தன்மையைக் குறிப்பிட்டுள்ள இதே வல்லுநர் குழு, அதைப் புறக்கணித்துவிட்டுத் துறைமுகம் அமையவுள்ள இடத்தை ஏற்றுக்கொண்டதோடு சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான நிபந்தனைகளையும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

வங்கக் கடலையும் பழவேற்காட்டையும் பிரித்து நிறுத்தும் மிகச் சிறிய மணல் பரப்பைத் துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள் அரித்து எடுத்துவிடும். பழவேற்காடு ஏரி வங்கக் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இது நடந்தால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தாலுக்காக்களின் உள்நாட்டுப் பகுதிகளும் ஆந்திராவின் உள்நாட்டுப் பகுதிகளும் புயல்களின் தீவிரத் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். கடல்நீர் உட்புகும் பிரச்னையும் இருப்பதால், நிலத்தடி நீரில் கடல்நீர் புகுந்து குடிக்கத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.

ஊர்ணம்பேடு விவசாய நிலம்

Concerned youth for people என்ற அமைப்பு துறைமுகம் வரவுள்ள பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை வரைபடமாக்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்தவரும் கட்டுமானக் கலை பேராசியருமான சுதிர், “சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நீர்நிலைகளை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோதத் திட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் வல்லுநர் குழுவுக்கு இல்லை. அங்கிருக்கும் 50,000 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த விரிவாக்கத் திட்டத்துக்குக் கரைக்கடலை அழித்துச் சுமார் 2,000 ஏக்கர்கள் நிலமீட்பு செய்யப்படும். எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்துச் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். இந்த இயற்கையான அமைப்பு ஆரணி-கொற்றலை ஆற்றின் நன்னீர் பகுதிகளில் உப்பு நீர் புகாமல் தடுக்கின்றன. இதைச் செயற்கையாக மாற்றுவது மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். சென்னைக்கு நாளொன்றுக்குச் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் அந்தப் பகுதியிலிருந்து கிடைக்கிறது. இந்த நன்மைகளையெல்லாம் அழிக்கும் வல்லமையுள்ளது அதானியின் இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம்.

அதானி துறைமுக விரிவாக்கப் பிரச்னை

“இந்தத் திட்டத்தை முன்மொழிந்து தொடக்கத்தில் அதானி நிறுவனத் தரப்பிலிருந்து போடப்பட்ட மனுவில் இது வரவிருக்கும் நிலம் முழுவதும் பொட்டல் காடுகள் என்றும் இவை யாருக்கும் பயனில்லாத நிலமென்றும் கூறியுள்ளார்கள். அங்கிருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளையும் அதைச் சார்ந்திருக்கும் மீனவர்களையும் அங்கிருக்கும் விவசாய நிலங்களையும் அவற்றைச் சார்ந்திருக்கும் கால்நடைகளையும் விவசாயிகளையும் மறைத்து இப்படிப் பொய்யான தகவல் கொடுத்து அனுமதி வாங்க முயன்ற நிறுவனத்துக்குச் சாதகமாக வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. அதானி பேரழிவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், வரவிருக்கும் ஆண்டுகளில் நிகழவிருக்கும் பேரழிவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
காட்டுப்பள்ளியில் எல்&டி துறைமுகம் 2008-ம் ஆண்டு வந்த பிறகு நேரடியாகப் பாதிக்கப்பட்டது காட்டுப்பள்ளி கிராமம். அங்கிருந்து வந்திருந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த கோபி இந்தத் திட்டம் குறித்துப் பேசியபோது, “எல்&டி துறைமுகத்தால் நாங்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டோம். அது வருவதற்குமுன் நாங்கள் அங்கு மீன் பிடித்தல், சிப்பி, நண்டு, இறால் சேகரித்தல், மரங்களை வளர்த்து அவற்றை வெட்டி அதன்மூலம் பயனடைதல் என்று பல வழிகளில் எங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருந்தோம். இவை அனைத்துமே பாதிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அவர்கள் 10,000 பேருக்கு நேரடியாக நிரந்தர வேலையும் 10,000 பேருக்கு மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்கள். இன்றுவரை ஒருவருக்குக்கூட நிரந்தரமான வேலையை அவர்கள் கொடுக்கவில்லை. இப்போது மீண்டும் அதை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் எங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.

மீனவர்கள்

அதானி அநீதியாகக் கொண்டுவரவிருக்கும் இந்தப் பேரழிவுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவும் தயாராக இருப்பதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் மீனவர்கள் சங்கம், பழவை பெண்கள் மீன் தொழிலாளர் சங்கம், ஊர்ணம்பேடு, செங்கனிமேடு, காட்டூர்-காட்டுப்பள்ளி காலனி குடியிருப்பாளர்கள் அனைவரும் தெரிவித்தனர்.
மக்கள் நலனே பிரதானம் என்று செயல்பட வேண்டிய அரசு அதைச் செய்யுமா, அதானி என்ற பெருமுதலையின் சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்துமா என்பது இந்தத் திட்டத்துக்கு அரசு ஆற்றப்போகும் எதிர்வினையிலிருந்தே தெரியும்.

This article appeared on Vikatan on 01st August 2019 Read it here

Activists raise their voice against Kattupalli port expansion

‘State must ensure project gets quashed at proposal stage’

Activists on Wednesday slammed the granting of Terms of Reference (ToR) for the expansion of the Kattuppalli port by the Adani Group’s Marine Infrastructure Developers Pvt. Ltd. (MIDPL).

The Expert Appraisal Committee (EAC) of the Ministry of Environment had early this month recommended granting ToR for the project with a large number of conditions. This, despite a sub-committee of the EAC report stating that the north coast near Kattupalli village was under severe erosion and the southern coast of Ennore was witnessing accretion (attributable to breakwater) after the construction of the Ennore port. A tidal creek, some 2.8 km away, was also silting up rapidly causing concern to nearby power plants drawing cooling water from it, the report had pointed out.

At a press conference organised by the Save Ennore Creek Campaign, retired Madras High Court judge Hariparanthaman said, “The EAC should not have granted the ToR. Forget the stage of the Environmental Impact Assessment, even the ToR should be cancelled,” he said.

The company was planning to reclaim 2,000 acres in the sea by dumping dredged material. “This is an ecologically sensitive area. This type of activity cannot be carried out,” he argued.

He said the Tamil Nadu government should ensure that the project gets quashed at the proposal stage itself. Otherwise it was setting itself up for environmental disasters that are certain to follow in the coming years, he cautioned.

G. Sundarrajan of Poovulagin Nanbargal said the project would cause severe environmental damage and the Kancheepuram-Chennai-Tiruvallur belt would come under undue stress.

Ignoring memo

Sudhir, a teacher of architecture, who had undertaken an independent study of the region, said the EAC had ignored the memo of its own findings and had issued ToR to the company. As per a 2009 office memorandum of the MoEF, the setting up of ports in high erosion zones or ecologically sensitive areas was prohibited and the EAC had gone against this by granting the ToR.

Residents of the localities in the vicinity of the project also called for the immediate cancellation of the ToR, said Nityanand Jayaraman of Save Ennore Creek Campaign.

This article appeared on The Hindu on 01st August 2019 Read it here .

‘Adani port will increase flood risk’

Fishers, farmers join hands to oppose Adani Kattupalli Port

A retired High Court judge D Hariparanthaman told reporters that the port is laying a foundation for disaster.

Retired HC judge D Hariparanthaman and Palavai Pengal Meen Thozilalar Sangam representative G Rajalakshmi at Chennai press club on Wednesday | Shriram G

CHENNAI: Pulicat and Ennore fishers, farmers, activists and Chennai residents on Wednesday expressed opposition against the proposed Adani Kattupalli Port stating that it will destroy the livelihood of 50,000 local fishers, in addition to degrading eco-sensitive sites in that area. The project will also worsen water scarcity and expose 10 lakh people in Chennai and Tiruvallur districts to increased flood and cyclone risk, according to a joint statement issued by them at a press meet.

“With climate change, Tamil Nadu is likely to face severe water crisis and intense rainfall over short periods of time. We may get three months worth of rainfall in one day,” said G Sundarrajan, of Poovulagin Nanbargal, an environmental advocacy organisation, adding that mangroves and waterbodies at Ennore and Pulicat act as reservoirs during heavy rain and recharges groundwater during scarcity. “When these precious landscapes are encroached, Chennai and Tiruvallur will face intense flooding during rain,” he said.

Recently, an expert committee of the Ministry of Environment submitted a report that found that “Majority of the proposed development falls under erosion zone” and that the company proposes to “reclaim some water bodies along the Kosathalaiyar estuary.” The report also observed that “The entire Pulicat system, along with Buckingham Canal and Ennore Creek, has been designated as ecologically-sensitive areas and placed under Coastal Regulations Zone -1.”

Further, construction of the port will also lead to severe erosion of the coast southwards from the port, the statement said adding, “Erosion triggered by the port’s breakwaters will breach the thin barrier separating Pulicat lake from Bay of Bengal and merge the lake into the sea. If this happens, inland areas in Gummidipoondi and Ponneri taluks, and Andhra Pradhesh will face the full fury of cyclones.”

A retired High Court judge D Hariparanthaman told reporters that the port is laying a foundation for disaster. “Tamil Nadu’s coast already has three ports. Building another will destroy the coastal ecosystem and livelihood. Such a large port has to be built at natural harbours that have still water. We’re putting ourselves at high-risk.” Representatives of Pazhaverkadu Lighthouse Paguthi Meenavar Sangam, and other organisations also addressed the media.

This article appeared on The New Indian Express on 01st August 2019 Read it here 

மீனவர்கள், விவசாயிகள், சென்னைவாசிகள் கரம் கோர்த்து அதானி துறைமுகத்தை எதிர்க்கின்றனர்! பழவேற்காட்டைக் காக்க எழுகின்றனர்!

WhatsApp Image 2019-07-31 at 4.21.17 PM.jpeg

 

காட்டுபல்லியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் அதானி பெருந்துறைமுகம் உள்ளூர் மக்களுக்கும் சென்னை மாநகரத்துக்கும் வாழ்வா சாவா என்ற பிரச்சனையாக இருக்கும் என்பதால் அதற்க்கு எதிராகப் போராடுவோம் என்று பழவேற்காடுஎண்ணுர் மீனவர்களும், விவசாயிகளும் சென்னைவாசிகளும் தெரிவித்தனர்.

எண்ணூர்பழவேற்காடு பகுதியில் வாழும் 50 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அதானியின் துறைமுகம் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல், சென்னையின் குடிநீர் பிரச்சனையை மேலும் தீவிரமாக்குவதுடன், சென்னைதிருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 10 லட்சம் பேருக்கு வெள்ள அபாயத்தையும், புயல் தாக்குதலின் தீவிரத்தையும் அதிகப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பருவநிலை மாறுதலின் காரணமாக நீர் நெருக்கடி அதிகப்படுவதும், கடல் மட்ட உயர்வு ஏற்படுவதும், புயல்களின் தீவிரம் அதிகமாவதும் மேலும் கூடுதலாகும்.

சென்னை மாநகரத்தையும், திருவள்ளூரையும் ஆபத்துகுள் தள்ளும் திட்டத்தால் அரசுமீது தெரிவித்த  விவசாயிகளும், பழவேற்காடுலைட்ஹவுஸ் மீனவர்களும், மாநகரின் பிரபலமான குடிமக்களும், அதானியின் திட்டத்தை அரசு ரத்துசெய்யாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்று அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலையும், பழவேற்காட்டையும் பிரித்து நிறுத்தும் மிகச் சிறிய மணல் பரப்பை துறைமுகத்தின் அலை தடுப்பான்கள் அரித்து எடுத்துவிடும். பழவேற்காடு ஏரி வங்கக் கடலின் அங்கம் ஆகிவிடும். இப்படி நடந்துவிட்டால், கும்மிடிபூண்டி, பொன்னேரி தாலுகாக்களின் உள்நாட்டுப் பகுதிகளும், ஆந்திராவின் உள்நாட்டுப் பகுதிகளும் புயல்களின் முழு வேகத் தாக்குதலுக்கு ஆட்பட வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர் பரப்பில் கடல் நீர் புகுந்துவிடும். இதன் காரணமாக குடிநீர் பிரச்சனையும், பாசன நீர் பிரச்சனையும் மேலும் அதிகப்படும்.

சமீபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஒன்று அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. “திட்டத்தில் குறிப்பிடப்படும் வளர்ச்சிக்கான பகுதிகள் கடலரிப்பு உள்ள பகுதிகளில் வருகின்றனஎன்றும், “கொசத்தலையாறு முகத்துவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளை மூடுவதற்கு கம்பெனி திட்டமிட்டுள்ளதுஎன்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும், “பழவேற்காடு ஏரி சுற்றுச்சூழல் கட்டமைப்பும், அத்துடன் பங்கிங்காம் கால்வாயும் எண்ணூர்  கழிவெளியும் சுற்றுச்சூழல் நுண் தன்மை வாய்ந்த பகுதி என்று வரையறுத்து அறிவிக்கப்பட்டுள்ளவை. அத்துடன் அவை CRZ-1 மண்டலத்தில் வருகின்றனஎன்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

கடலரிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகள் அல்லது சுற்றுச்சூழல் நுண் தன்மை வாய்ந்த பகுதிகளில் துறைமுகங்கள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2009 அலுவலக ஆவணம் தெளிவாகச் சொல்கிறது.  மேற்படி ஆவணத்தையும் தனது சொந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் புறக்கணித்துள்ள கமிட்டி, துறைமுகம் அமையவுள்ள இடத்தை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கான நிபந்தனைகளையும் கம்பெனிக்கு அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் நுண் தன்மையுள்ள பகுதிகளில் நீர்நிலைகளை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோத திட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் நிபுணர் குழுவிற்கு இல்லை“, என்று கட்டுமான கலை ஆசிரியரும் “Concerned Youth for People” அமைப்பைச் சேர்ந்தவருமான  பேரா.சுதிர் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்க்கு கடலை அழித்து 2000 ஏக்கர் நிலம் உருவாக்கப் படும். எண்ணூர்பழவேற்காடு சதுப்பு நிலம்மற்றும் நீர்நிலைகளை அழித்து சிறப்பு பொருளாதர மண்டலதிற்க்கான real estate நிலமும் உருவாக்க திட்டம் உள்ளது. உப்பளங்கள், உவர் சதுப்பு நிலங்கள், அலையாத்திகாடுகள், ஆழக் குறைவான மற்றும்ஆழமான நீர்நிலைகள்ஏரிகள் ஆகியவை மிக முக்கியமான இடை படு பகுதிகள் (crucial buffer) ஆகும்.

அவை ஆரணியாறுகொசத்தலையாற்றின் நன்னீர் பகுதிகள் உப்பு நீராகாமல் தடுக்கின்றன. இச்சதுப்பு நிலங்கள் மழைநீரைச் சேகரிக்கின்றன. நிலத்தடி நீர் மேம்படுவதற்கு வழி வகுக்கின்றன. வெள்ளத்திலிருந்து காக்கும் அரணாக உள்ளன. புயல் காலங்களின் போது,  கடலில் எழும் பேரலைகளைத் தாங்கி நிறுத்தும் எண்ணூர்பழவேற்காடு கழிவெலி (lagoon) உள்நாட்டு பகுதிகள் கடல் நீரால் பாதிக்கப்படாமல் காக்கின்றது.

மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை அமைப்பும் அதானியின் திட்ட முன்வைப்பை ஆரம்பகட்டத்திலேயே நிராகரிக்காதது மிகுந்த கண்டனத்துக்குரியது.

அதானி பேரழிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்ட முன்வைப்பை அரசு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், வரவிருக்கும் ஆண்டுகளில் நிகழவிருக்கும் பேரழிவிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டியதிருக்கும்“, என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி D. ஹரிபரந்தாமன் குறிப்பிட்டார்.

பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி மீனவர்கள் சங்கம், பழவை பெண்கள் மீன் தொழிலாளர் சங்கம்,  ஊர்னாமேடு , செங்கெனிமேடு, காட்டூர்காட்டுபள்ளி காலனி குடியிருப்பாளர்கள், பூவுலகின் நண்பர்கள், Concerned Youth for People, எண்ணூர் கழிவெளி காப்போம் கழிவெளி பிரச்சாரத்தின் உறுப்பிணர்கள் ஊடகங்களை இன்று சந்தித்தனர்.

மேலும் விவரங்களக்கு தொடர்புகொள்ளவும்:

துரை மகேந்திரன்:  9840692507, பழவேற்காடு

நித்தியானந் ஜெயராமன்: 9444082401

எண்ணூர் முகத்துவாரம் காப்போம் இயக்கம்Read More »

செய்தி வெளியீடு – 
வறண்ட நிலையிலும் சுரண்ட தடையில்லை — சென்னையின் நீராதாரமான திருவள்ளூரின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் எண்ணூர் சதுப்பு நிலங்களில் நடந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் 

சென்னையின் நீர் பற்றாக்குறை பிரச்சனை தவறான ஆளுகையால் ஏற்பட்டது என்று வாதிடும் எண்ணூர் மீனவர்களும்எண்ணூர் கழிமுகம்காப்போம் இயக்கமும் பத்திரிகையாளர் குழு ஒன்றை  எண்ணூருக்கு அழைத்துச் சென்றனர்மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமானகாமராஜர் துறைமுக நிறுவனம் எண்ணூர் சதுப்பு நிலங்களை எந்த அனுமதியும் பெறாமல் ஆக்கிரமிப்பதை அவர்கள் பத்திரிகையாளர்களுக்குக்காட்டினர்மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் செய்கின்ற அத்துமீறலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும்மாநிலகடற்கரை மண்டல மேலாண்மை அதிகார அமைப்பும்திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றுகுற்றம்சாட்டினர்இதுபோன்ற சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் நீர் பற்றாக்குறைக்குக் காரணமாகின்றன என்று சுற்றுப் பயண அமைப்பாளர்கள்சுட்டிக் காட்டினர்.

எண்ணூர் காயலின் மேற்கு எல்லையில் உள்ள சதுப்பு நிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட கடல் மண்ணைக் கொட்டு நிரவுவதன் மூலம் 261acre பரப்புள்ள கடற்கரை பணியிடத்தை காமராஜர் துறைமுகம் உருவாக்கி வருகிறது.  ரயில் வண்டிகள் நிறுத்தும் இடத்துக்காகவும் சுதந்திரவர்த்தகத்துக்கான சரக்ககத்துக்காகவும் நிலக்கரி சேமிப்பு இடத்துக்காகவும்குறைந்தது 500 ஏக்கர் பரப்பு ஏற்கனவே நிரவப்பட்டுள்ளது.டாம்பீகமாக பேசப்பட்டுவரும் சாகர்மாலா பெருந்திட்டத்தின் ஓர் அங்கம் என்று சொல்லப்படும் இந்த திட்டத்திற்கு  மத்தியஅமைச்சகத்திடமிருந்து இன்னமும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படவில்லைஅது மட்டுமல்லகட்டுமானத்தை மேற்கொள்வதற்கானஒப்புதலையும் கூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறவில்லை.

உப்பளங்கள்சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட எண்ணூர் பழவேற்காடு சதுப்பு நிலப் பகுதியின் மேற்குப் வெளிப் பகுதி மழைநீரை மூன்று முதல்நான்கு மாதங்கள் பிடித்து வைத்துக்கொள்கின்றனஇவற்றைக் காயல்கள் (backwaters) என்போம்ஆரணியாறு– கொசத்தலையாறுவடிநிலப்பகுதியில் (A-K Basin கடல்நீர் நுழையாமல் தடுக்கும் இயற்கை அரணாக  இந்தக் காயல்கள் அமைந்துள்ளனஇந்த வடிநிலத்திலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டருக்கு மேலான நீரை சென்னை தற்போது பெற்றுவருகிறதுரூபாய் 500 கோடி செலவில்கட்டமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அளிக்கும் நாளொன்று 125 மில்லியன் லிட்டர் நீரை  A-K வடிநிலத்தால் அளிக்க முடியும்.

எண்ணூர்– பழவேற்காடு காயல் பகுதி புயலால் ஏற்படும் அலைகள் உள் நுழைவதைத் தடுக்கும் அரணாக உள்ளனநதியின் வெள்ளப்பெருக்கிலிருந்து உள்நாட்டுப் பகுதிகளைக் காக்கின்றன.ஆனால்இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால்சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்ஆனால்காமராஜர் துறைமுகம், NTECL, பாரத்பெட்ரோலியம்இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்குச் சொந்தமான கட்டுமானங்களின் காரணமாகஏற்கனவே1500 ஏக்கர் காயல்தொலைந்துபோய் விட்டதுமேலும், TANGEDCOவின் வடசென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் குளங்களுக்காக 1000 ஏக்கர் பரப்புஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுநிலத்தடி நீரை மிகையாக உறிஞ்சுவதாலும்எண்ணூர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாலும் பொன்னேரி வரைஉப்புநீர் உள்நுழைந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டதுதற்போது பஞ்செட்டியையும்தாமரைப்பாக்கத்தையும் உப்பு நீர்தொட்டுக்கொண்டிருக்கிறது.

அடையார் ஆறுகூவம் ஆறு மழை காலங்களில் வெள்ள நீர் கடலில் கலக்கும் வடிகாலாக மட்டுமே செயல்படும்ஆனால் எண்ணூர் ஆறு அதற்கே உள்ள தனிசிறப்பான பரவலில் வெள்ள நீர்களை பிடித்து வைத்து கடலில் கலக்காமல் தடுத்து இப்பகுதியின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கிறது” என்று திரு. Janakarajan(நீரியல் வல்லுனர்கூறினார்இனியும் இந்த எண்ணூர் ஆற்று பரவலை ஆக்கிரமிப்பு செய்து வந்தால் கடல் நீர் உட்புகுந்து இன்னும் பாதிக்கப்படாத பகுதிகளிலும் நிலத்தடி நீர் கெட்டுபோவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

இந்த நீர்பிடிப்பு பகுதிகளை (பரவல்கள்ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப்பட வில்லையென்றால் கடலின் தாக்கம் ஆறுகால்வாய் மூலம் உள் நாட்டு பகுதிகளில் உணரமுடியும்கொசஸ்தலை ஆற்றிலிருந்து 3 கி.மீ துரமுள்ள காரனோடைஎடையான் சாவடி போன்ற கிராமங்களிலும் இந்த அச்சம் உள்ளதுஎண்ணூர் ஆற்றின் நீர்பிடிப்பின் ஆக்கிரமிப்பும்வருங்கால கடல் மட்ட உயர்வு போன்ற சூழலில் கடலின் அலை தாக்கமே ஒரு பேர் ஆபத்தை உருவாக்கம்.

அடையாற்றையும் கூவத்தையும் பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுகிறோம் என்று கூறி லட்சக் கணக்கான ஏழை மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்மற்றொரு பக்கம் எண்ணூர்– பழவேற்காடு சதுப்பு நிலப் பகுதிகளில் அரசு நிறுவனங்களே ஆக்கிரமிப்பு செய்து மக்களை வரச்சியில் திண்டாட வைத்துள்ளனர்” என்று R.L. சீனிவாசன் கூறினார்.

மேலும் விவரங்களுக்குதொடர்பு :

R.L.சீனிவாசன் – 9884280891

நித்தியானந் ஜெயராமன் – 9444082401


 

Press Release 

Govt ignores wetlands destruction despite water crisis: 400 acres Ennore wetlands occupied by Kamaraj Port

Chennai, 20th June 2019 – Arguing that the current water crisis is a result of deliberate malgovernance, Ennore fishers and Save Ennore Creek campaign led a media team to sites of ongoing and unlicensed encroachment of Ennore wetlands by Central PSU Kamarajar Port Ltd. Blaming the Tamil Nadu Pollution Control Board, State Coastal Zone Management Authority and the Thiruvallur District administration of turning a blind eye to violations by state and central PSUs, the tour organisers said it is actions like this that has led to water scarcity.

Kamarajar Port has begun construction of a 261 -acre Coastal Employment Unit by dumping dredged sea sand to level wetlands along the western edge of the Ennore backwaters. At least 500 acres have already been levelled in preparation for a Railway Yard, a Free Trade Warehouse Zone and a coal yard. The project, which claims to be part of the prestigious Sagarmala scheme, does not have an Environmental Clearance from the Union Ministry of Environment or Consent to Establish from the TNPCB.

The western edges of the Ennore-Pazhaverkadu wetlands, including the salt pans and marshes, hold rainwater for three to four months. The backwaters are an important natural defence infrastructure against seawater intrusion into the rich groundwater resources of Araniyar Kosasthalaiyar (A-K) Basin. Chennai is currently drawing more than 100MLD of water from the well fields in the A-K basin. If revived and maintained properly, the AK Basin aquifers can yield upto 125MLD of freshwater – far more than the 100MLD desalination plant set up at a high cost of Rs. 500 crore. The Ennore-Pulicat backwaters also hold storm tides and cyclonic surges, and protect inland areas from inundation through the river.

However, for this, the wetlands have to be protected. Already, more than 1500 acres has been lost to industrial infrastructure belonging to Kamarajar Port, NTECL, Bharat Petroleum and Hindustan Petroleum. Additionally, more than 1000 acres is filled with flyash from TANGEDCO’s North Chennai Thermal Power Station. Aggravated by over drawal of groundwater and encroachment of the Ennore wetlands, salinity intrusion has already affected the groundwater in regions as far as Ponneri, and is approaching Panchetti and Thamaraipakkam.

“Unlike Adyar and Cooum Rivers that only act as a drain for floodwaters during monsoons, the flood plains that are unique to the Ennore Creek retains water, protecting the inland ground water resources from salinity intrusion” said Prof. Janakarajan, a water resource expert. If such encroachments continue in the Ennore Creek, areas that have never experienced salt water ingress are at risk of severe salinisation.

If encroachments continue and efforts to protect the floodplains of the Ennore Creek fail, possibilities of sea water travelling deep inland through rivers and canals are high. Areas like Karanodai, Edayanchavadi etc. located more than 3 KM inland along the Kosasthalaiyar are facing sea water ingress through surface water streams. In the face of newer encroachments and future sea level rise, impacts of tidal surges is only going to increase.

“On one hand you have the government evicting thousands of  poor people from the banks of Cooum and Adayar rivers in the pretext of disaster mitigation and removal of encroachments. On the other hand, the same government’s agencies are encroaching into the Ennore Creek, pushing us to the brink of disaster after disaster” said R.L Srinivasan, a fisherman from Ennore. 

For more information, Contact:

R.L Srinivasan (Katukuppam) – 9884280891

Nityanand Jayaraman (Save Ennore Creek Campaign) – 9444082401